T20 உலகக் கோப்பை இந்திய அணியில் ஏற்படும் மாற்றம் - உடல் தகுதி தேர்வு முடிவு!
T20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பெரும் மாற்றம் ஏற்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
By : Bharathi Latha
துபாயில் நடைபெற்று துபாயில் நடைபெற்று வரும் இந்திய அணி வெளியேறி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. ஏனெனில் கடந்த ஆண்டு வெற்றி பெற்ற அணியாக இந்திய அணி விளங்கியது. ஆனால் இந்த ஆண்டு அந்த வாய்ப்பை இந்திய அணி தவறவிட்டிருக்கிறது. இதனை அடுத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஆர்வம் டி20 உலக கோப்பை தொடரின் பெரும் எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கின்றது. அக்டோபர் மாதம் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி வரும் செப்டம்பர் 15 மற்றும் 16ம் தேதிக்குள் யார் யார் வீரர்கள் என்பதை அறிவிக்க வேண்டும்.
ஆசிய கோப்பையில் இந்தியாவிற்கு பெரும் பிரச்சினையாக இருந்தது பூம்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் இல்லாததுதான். அவர்கள் போட்டியின் இடையில் ஏற்பட்ட காயின் காரணமாக விலகியிருந்தார்கள். உலகக் கோப்பை தொடரிலாவது அவர்கள் இந்திய அணியில் இடம்பெறுவார்களா? என்பது என்பது இந்திய ரசிகர்களின் பெரும் கேள்விகளாக இருந்து வந்தது. இதற்கு தற்போது இதற்கான முடிவு தற்போது வெளியாகி இருக்கின்றது.
நேற்றைய தினம் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியின் உடல் தகுதி தேர்வு நடைபெற்றது. இதில் இரண்டு வீரர்களின் உடல் தகுதி தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கின்றது. இருவரின் பௌலிங் வேகம் நன்கு ஆராய்ந்த பயிற்சியாளர்கள் இந்திய அணிக்கு மீண்டும் செல்லலாம் என்று சான்றிதழ்கள் கொடுத்துள்ளனர். இதன் காரணமாக இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் டி20 தொடரில் மோத இருக்கிறது.
Input & Image courtesy: Sports News