T20 உலக கோப்பை தொடர் - இந்திய அணியில் ஜடேஜா இல்லாதது மிகப்பெரிய இழப்பு!
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா இல்லாதது மிகப்பெரிய இழப்பாகும் என்று ஜெயவர்த்தனே கருத்து.
By : Bharathi Latha
உலகம் முழுவதும் 16 அணிகள் பங்கேற்கும் எட்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் அக்டோபர் 23ஆம் தேதி மோதுகிறது. மேலும் இதுகுறித்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இணையதளத்திற்கு இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே அளித்த ஒரு பேட்டியில் இவ்வாறு கூறியிருக்கிறார்.
இந்திய அணியில் பேட்டிங் வரிசையில் ஐந்தாவது இடத்திற்கு ரவீந்திர ஜடேஜா நல்ல பொருத்தமாக இருந்தார். அவர் அந்த வரிசையில் நன்றாக பேட்டிங் செய்தார். டாப் 6 பேட்டிங் வரிசைக்குள் ரவீந்திர ஜடேஜாவும், ஹர்திக் பாண்டியாவும் இருப்பது இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் நல்ல நிகழ்வு தன்மையை அளிக்க கூடியதாக இருந்தது. ஆனால் பயிற்சியின்போது இடது கை பேட்ஸ்மனாக ரவீந்திர ஜடேஜா அணியில் இல்லாதது கடினமான ஒன்றாகும். அவர் இல்லாததால் தினேஷ் கார்த்திக்கை விடுத்து இடது கை பேட்மனாக ரிஷிப் யை அந்த வரிசையில் கொண்டு வர வேண்டியது இருக்கிறது.
பேட்டிங் வரிசையில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனைக்கு உலகக்கோப்பை போட்டிக்கு முன்னதாக இந்திய அணி தீர்வு காண வேண்டியது அவசியமாகும். நல்ல ஃபார்மில் இருந்த ரவீந்திர ஜடேஜாவும் ஆட முடியாமல் போனது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு. நீண்ட காலமாக பெரிய அளவில் அடிக்காமல் இருந்த விராட் கோலி ஆசிய கோப்பை போட்டியில் சிறப்பாக ஆடியதும் சதம் அடித்ததும் அவரது நம்பிக்கையை அதிகரித்து இருக்கும். விராட் பேட்டிங்கில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவது இந்திய அணி நம்பிக்கையை அதிகரிக்கும், அதே சமயத்தில் அது எதிரணிக்கு கவலை அளிக்கக் கூடியதாகவும் இருக்கும் என்று கூறி இருக்கிறார்.
Input & Image courtesy: News