T20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர்: 5 லட்சம் டிக்கெட்கள் விற்பனை!
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 5 லட்சத்திற்கு மேல் டிக்கெட் இது வரை விற்பனை ஆகி உள்ளது.
By : Bharathi Latha
16 அணிகள் பங்கிற்கும் எட்டாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் 16ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இந்திய அணிகள் பல்வேறு பயிற்சிகளையும் ஈடுபட்டுள்ளார்கள். அண்மையில் இந்திய வீரர்களுக்கு காண பட்டியலும் வெளியிடப்பட்டு இருந்தது. குறிப்பாக இந்திய ரசிகர்களுக்கு இடையே இந்த டி20 தொடர் பெரும் வரவேற்பு பெற்றதாகவும் திகழ்கிறது.
அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை இந்த தொடர் நடக்கிறது. இந்த உலகக்கோப்பை தொடரை பார்க்க மொத்தமாக 82 நாடுகளை சேர்ந்த ரசிகர்கள் 5 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட் வாங்கியுள்ளார்கள். இதுவரை சில ஆட்டங்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலான டிக்கெட் மட்டுமே இருப்பதாகவும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது. மேலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அமைப்பான ICC வெளியிட்டுள்ள தகவலின் படி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
ஐந்து லட்சத்திற்கு அதிகமான டிக்கெடுகள் தற்போது வரை விற்பனையாக்கி உள்ளது என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள். இதில் குறிப்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் ஆட்டம் அக்டோபர் 23ஆம் தேதி நடக்கிறது. இந்த ஆட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட முதல் கட்ட டிக்கெட் ஏற்கனவே விற்று விட்ட இந்த நிலையில் தற்போது கூடுதலாக ஒதுக்கப்பட்ட சொகுசு டிக்கெட்களும் ஒரு நிமிடத்திற்குள் விற்று விட்டதாக ICC தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்திய ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பாக இந்த டி20 உலக கோப்பை அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: News