Kathir News
Begin typing your search above and press return to search.

T20 உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணை ICC வெளியீடு: இந்தியா எப்பொழுது?

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை தற்பொழுது ICC வெளியிட்டுள்ளது.

T20 உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணை ICC வெளியீடு: இந்தியா எப்பொழுது?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  15 Sep 2022 8:13 AM GMT

ஆசிய கிரிக்கெட் கோப்பை தொடரை அடுத்து தற்பொழுது அனைவரின் எதிர்பார்ப்பாக டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இருக்கின்றது. இந்த ஆண்டிற்கான T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் வருகின்ற அக்டோபர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடர் குறித்த அட்டவணை தற்போது வெளியாகி இருக்கின்றது. இதில் இந்தியா எப்பொழுது யாருடன் விளையாடுகின்றது என்பது குறித்து தகவல்களும் வெளியாகி இருக்கின்றன.


அக்டோபர் 16ம் தேதி தொடங்கி நவம்பர் 13ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரில் குரூப்-1 மற்றும் குரூப் 2 என இரண்டு சுற்றுகள் நடைபெற உள்ளன. குரூப்-1 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. தகுதி சுற்றுகள் மேலும் இரண்டு அணிகள் இதில் இடம் பெறும்.


மேலும் இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியை பாகிஸ்தானி எதிர் கொள்கிறது. இரண்டு அணிகளும் மோதும் போட்டி வருகின்ற அக்டோபர் 23ஆம் தேதி மெல்போன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகின்றது. மூணாவது போட்டி அக்டோபர் 30ம் தேதி தென்னாப்பிரிக்கா அணியுடன் பெர்த் மைதானத்தில் மோதுகின்றன.

Input & Image courtesy:

Next Story
கதிர் தொகுப்பு
Trending News