Kathir News
Begin typing your search above and press return to search.

இன்றைய தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி: கடைசி 20 ஓவர் போட்டி இன்று நடக்கிறது!

இந்தியா, வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா, ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (பிப்ரவரி 20) நடைபெற உள்ளது.

இன்றைய தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி: கடைசி 20 ஓவர் போட்டி இன்று நடக்கிறது!

ThangaveluBy : Thangavelu

  |  20 Feb 2022 4:36 AM GMT

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் 2வது ஆட்டத்தில் 8 ரன் வித்தியாசத்திலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ள இந்திய அணி தொடரை கைப்பற்றி 20 என்கின்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், இந்தியா, வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா, ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (பிப்ரவரி 20) நடைபெற உள்ளது.

இன்றைய போட்டியில் வெற்றிபெற்று தொடரை முழுமையாக வெல்லுமா இந்தியா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Source, Image Courtesy: Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News