தாலிபான்களுக்கு பயந்து கால்பந்து வீராங்கனைகள் பாகிஸ்தானில் தஞ்சம் !
ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் ஆட்சியை கைப்பற்றினர். அவர்கள் ஆட்சியை பிடித்த பின்னர் பெண்களுக்கு எதிராக பல்வேறு தடைகளை விதித்து வருகின்றனர். அதில் முக்கியமானவை கல்வி கற்கவும், விளையாடவும் தடை விதித்துள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தானில் இருந்த பெண் விளையாட்டு வீரர்கள் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
By : Thangavelu

இந்நிலையில், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஜூனியர் மகளிர் கால்பந்து அணியை சேர்ந்த வீராங்கனைகள் கத்தார் செல்வதற்கு திட்டமிட்டிருந்தனர். இதற்காக காபூல் விமான நிலையத்தில் கடந்த மாதம் 26ம் தேதி காத்திருந்தனர் அப்போது அங்கு நடைபெற்ற குண்டுவெடிப்பு காரணமாக எங்கு செல்வது என்று தெரியாமல் 32 பேரும் தவித்து வந்தனர்.
இது பற்றிய தகவல் கிடைத்த இங்கிலாந்தை சேர்ந்த கால்பந்து எனும் தொண்டு நிறுவனம் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 32 கால்பந்து வீராங்கனைகள் மற்றும் அவர்களின் குடும்பத்தாரை பத்திரமாக பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகளை செய்தது.
அதன்படி அவர்களுக்கு பாகிஸ்தான் அரசும் உடனடியாக விசா வழங்கி தங்கள் நாட்டிற்குள் அனுமதித்தது. இதனால் 32 வீராங்கனைகள் மற்றும் அவரது குடும்பத்தார் பாகிஸ்தானில் தற்போது அடைக்கலம் புகுந்துள்ளனர்.
Source, Image Courtesy: Maalaimalar