Kathir News
Begin typing your search above and press return to search.

கோவிலில் கிரிக்கெட் விளையாடிய வீரர்.. சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம்..

கோவிலில் இந்திய கிரிக்கெட் வீரர் கிரிக்கெட் விளையாடிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

கோவிலில் கிரிக்கெட் விளையாடிய வீரர்.. சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம்..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  7 Jun 2023 3:47 AM GMT

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி பிறகு இந்திய அணியில் இடம் பிடித்தவர் வெங்கடேஷ் ஐயர். முதல் ஆண்டு சிறப்பாக விளையாடி ரசிகர்களை கவர்ந்த நிலையில் பிறகு காயம் காரணமாக தனது இடத்தை இழந்தார். விளையாட்டின் பொழுது இதற்கு ஏற்பட்ட காயம் காரணமாக இவரால் விளையாட முடியவில்லை. இந்த நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் 14 ஆட்டங்களில் விளையாடிய வெங்கடேஷ் ஐயர், 404 ரன்கள் அடித்துள்ளார். இதில் 1 சதமும், இரண்டு அரை சதமும் அடங்கும்.


இந்த நிலையில் வெங்கடேஷ் ஐயர் காஞ்சிபுரத்தில் உள்ள சங்கராச்சாரியார் மடத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பயின்று வரும் குருகுல மாணவர்களுடன் வெங்கடேஷ் ஐயர் கிரிக்கெட் விளையாடி இருக்கிறார். குருகுல மாணவர்கள் வந்து வீசி அதை கிரிக்கெட் வீரர் கச்சிதமாக அடித்த வீடியோ ஒன்றுதான் சமூக உங்களைத் தளங்களில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.


இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார். தற்போது சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம், கடவுளை வணங்கும் இடமான கோயிலில் வெங்கடேஷ் ஐயர் எப்படி கிரிக்கெட் விளையாட அனுமதிக்கப்பட்டது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். எனினும் வெங்கடேஷ் ஐயர் மீது தவறு இல்லை என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அது அரசு நிர்ணயிக்கும் கோவில் கிடையாது காஞ்சி மடத்தில் உள்ள தனிப்பட்ட சொத்து என்று விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News