இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை இந்த மூவர் தான் தீர்மானிப்பார்கள் என சச்சின் கருத்து - யார் அந்த மூவர்.!
இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை இந்த மூவர் தான் தீர்மானிப்பார்கள் என சச்சின் கருத்து - யார் அந்த மூவர்.!

By : Pravin kumar
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் நடந்து முடித்து விட்டது. இதில் ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலிய அணியும் டி20 தொடரில் இந்திய அணியும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி விட்டனர். மொத்தமாக எடுத்து பார்த்தால் 6 போட்டிகளில் மூன்று போட்டிகளில் இந்திய அணியும் மூன்று போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து டெஸ்ட் தொடர் வரும் 17ஆம் தேதி தொடங்க போகிறது. அதிலும் இந்த முதல் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் இந்த டெஸ்ட் தொடர் குறித்து பேசியிருக்கிறார். இதற்கு முன்னர் இந்தியா 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியா சென்று விளையாடியபோது டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றி சாதனைப் படைத்தது.
இதற்கு முக்கியமாக அந்த அணியில் முக்கிய அங்கமாக இருந்த டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீபன் ஸ்மித் ஆகியோர் தடை செய்யப்பட்டிருந்தார்கள்.

இந்நிலையில் இது குறித்து பேசிய சச்சின் டெண்டுல்கர் கூறுகையில் “கடந்த முறையை காட்டிலும் இந்த முறை ஆஸ்திரேலிய அணி மிகவும் வலுவான அணியாக இருக்கிறது. இந்த முறை அந்த அணியில் வார்னர், ஸ்மித், மார்னஸ் லாபஸ்சேன் ஆகியோர் இருக்கின்றனர். இது அவர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தைக் கொடுத்து இருக்கும்.

கடந்த முறையை காட்டிலும் இந்த முறை சற்று கடினமாக தான் இருக்கப் போகிறது. இந்த மூன்று வீரர்கள் தான் இந்த டெஸ்ட் தொடரை மாற்றப் போகிறார்கள். இந்திய அணி வெற்றி பெற்றாலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றாலும் அது இவர்கள் கையில்தான் இருக்கிறது” என்று நினைக்கிறேன் இவ்வாறு கூறியிருக்கிறார் சச்சின் டெண்டுல்கர்.
