Kathir News
Begin typing your search above and press return to search.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவை சேர்க்க வேண்டும் சச்சின் கருத்து.!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவை சேர்க்க வேண்டும் சச்சின் கருத்து.!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவை சேர்க்க வேண்டும் சச்சின் கருத்து.!
X

Pravin kumarBy : Pravin kumar

  |  12 Dec 2020 1:05 PM IST

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் ஒருநாள் தொடரில் 2 – 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியும், டி20 தொடரில் 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணியும் தொடரை கைப்பற்றியது. மீதமுள்ள 4 டெஸ்ட் போட்டிகளில் முதல் போட்டி வருகின்ற 17ம் தேதி நடைபெற உள்ளது. அடிலெய்டு மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியானது பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது முதல் டெஸ்ட் போட்டியுடன் நாடு திரும்புவதாக கூறியுள்ளார். மனைவியின் கர்ப்பகாலத்தில் அவருடன் இருப்பதற்கு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார் விராட்.
இதனால் மீதமுள்ள மூன்று டெஸ்ட் போட்டிக்கு யார் கேப்டனாக இருக்க வேண்டுமென்று பலர் தங்களது கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.இதைத்தொடர்ந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் தொடக்க இடத்திற்காக மாயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் போட்டியிடுகின்றனர். மாயங்க் அகர்வால் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தன்னை நிரூபித்துள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 இந்திய அணியில் இடம் பெற்றார். இதை தொடர்ந்து இவர் டெஸ்ட் தொடரிலும் களமிறங்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
அதேநேரத்தில் ரோகித் சர்மா காயம் காரணமாக ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட முடியவில்லை. இதனால் மாய்ங்க் அகர்வால் உடன் களம் இறங்கப் போவது யார் ? என்று கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா நிச்சயம் விளையாட வேண்டும் என்று கிரிக்கெட் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் அறிவுறுத்தியுள்ளார்.

Sachin

இதுகுறித்து அவர் கூறுகையில் : “தற்போது ரோகித் சர்மா காயத்தில் இருக்கின்றார். ஒருவேளை காயத்திலிருந்து விரைவில் குணமாகி விட்டால் இந்திய அணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ரோகித் சர்மாவின் காயம் பற்றி எனக்கு முழுவதும் தெரியாது. ரோகித் சர்மாவிற்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் மட்டுமே தெரியும். உடற்தகுதி தேர்வில் ரோகித் சர்மா பாஸ் செய்துவிட்டால் கண்டிப்பாக இந்திய அணிக்காக டெஸ்ட் தொடரில் களமிறங்க வேண்டும்” என்று தெரிவிக்கிறார் இந்திய முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News