Kathir News
Begin typing your search above and press return to search.

வீராட் கோலி , ரோஹித் சர்மா இல்லாதது இந்திய அணிக்கு பிரச்சனை தான் -  ஸ்டிவ் ஸ்மித் கருத்து.!

வீராட் கோலி , ரோஹித் சர்மா இல்லாதது இந்திய அணிக்கு பிரச்சனை தான் -  ஸ்டிவ் ஸ்மித் கருத்து.!

வீராட் கோலி , ரோஹித் சர்மா இல்லாதது இந்திய அணிக்கு பிரச்சனை தான் -  ஸ்டிவ் ஸ்மித் கருத்து.!
X

Pravin kumarBy : Pravin kumar

  |  26 Nov 2020 2:16 PM IST

ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து ரோஹித் சர்மா, இஷாந்த் சர்மா நீக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்களுக்கு இடையேயான தொடர் தான் தற்பொழுது கிரிக்கெட் வட்டரத்தில் பெரிய எதிர்பார்ப்புடன் உள்ள தொடர் ஆகும்.

இந்த தொடருக்காக இந்திய அணி ஐபிஎல் முடிவடைந்த கையோடு ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்று திவிர பயிற்ச்சியில் ஈடுப்பட்டு வருகின்றது. இந்த சுற்றுபயணத்தில் இந்தியா அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மூன்று டி-20 மற்றும் மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் கடுமையான பயிற்சியில் உள்ளன. மூன்று வீதமான தொடருக்கான இந்திய அணி வீரர்களும் ஆஸ்திரேலியா சென்றடைந்துள்ளனர்.


ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் இதுபற்றி கூறியதாவது இந்திய அணிக்கு முக்கியமான அனுபவ வீரர்கள் இல்லாதது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இருந்தபோதும் இந்திய அணியில் திறமையான வீரர்கள் இருக்கின்றனர் கேஎல் ராகுல், மாயக் அகர்வால் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இடத்தை பூர்த்தி செய்வார்கள் என்று எதிற்பார்க்கலாம். இந்திய அணியின் இந்த முக்கிய வீரர்கள் இல்லாததால் அந்த அணியை எளிதாக நினைத்துவிட முடியாது ஏனென்றால் இந்திய அணியில் அனைத்து வீரர்களுக்கும் தகுந்த பேக்கப் வீரர்கள் உள்ளனர்.

அவர்களின் இடத்தை பூர்த்தி செய்ய முயற்சிப்பார்கள் என்று ஆஸ்திரேலிய அணியின் வீரர் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார். எனினும் இது போன்ற முக்கிய தொடர்களில் முக்கிய வீரர்கள் இல்லாதது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News