மோயின் அலி, கிருஷ்ணப்பா, புஜாரா ஆகிய மூன்று முக்கிய வீரர்களை ஏலத்தில் எடுத்தது சி.எஸ்.கே அணி.!
மோயின் அலி, கிருஷ்ணப்பா, புஜாரா ஆகிய மூன்று முக்கிய வீரர்களை ஏலத்தில் எடுத்தது சி.எஸ்.கே அணி.!
By : Pravin kumar
இந்த ஆண்டு 14வது ஐ.பி.எல் தொடருக்கான வீரர்களின் ஏலம் தற்போது சென்னையில் நடைபெற்றது. இதில் அனைத்து அணிகளும் போட்டி போட்டுக் கொண்டு வீரர்களை வாங்கி வருகின்றனர். மேலும் இந்த ஏலத்தின் முடிவில் எந்தெந்த வீரர்கள் எந்த அணிக்கு செல்வார்கள் என்பதை பொறுத்தே அணியின் பலம் காணப்படும். அதனால் இந்த வருட ஐ.பி.எல் தொடரின் ஏலத்தினை கூட ரசிகர்கள் போட்டிகளை காண்பதை போல தற்போது மும்முரமாக கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தில் தொடக்கத்திலேயே விறுவிறுப்பாக ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறங்கியது. பஞ்சாப் அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட மேக்ஸ்வெலை எடுக்க சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கிடையே பெரிய போட்டி நிலவி வந்த நிலையில் 14.25 கோடிக்கு பெங்களூர் அணி மேக்ஸ்வெல்லை ஏலத்தில் எடுக்க அடுத்தாக வந்த மோயின் அலி மீது குறி வைத்தது சென்னை அணி.
தொடர்ந்து சென்னை அணி மோயின் அலியை எடுக்க முயன்ற நிலையில் 7 கோடிக்கு சென்னை அணி அவரை எடுத்தது. மோயின் அலி இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர். டி-20 போட்டியில் மோயின் அலி அதிரடியாக விளையாடக்கூடியவர். சென்னை அணி மோயின் அலியை எடுத்தது ரசிகர்களுக்கு பெரிய மகிழ்ச்சியாக அமைந்தது. அடுத்தாக கிருஷ்ணப்பா கௌதம்-ஐ சென்னை அணி 9.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
சென்னை அணி புஜாராவை 50 லட்சத்திற்கும் ஆந்திர இளம் வீரர்கள் ஹரிசங்கர் ரெட்டி மற்றும் வர்மா என்ற இரண்டு வீரர்களை ஏலத்தில் எடுத்தது கடைசியாக தமிழக வீரர் ஹரி நிஷாந்த் என்ற பேட்ஸ்மேனை ஏலத்தில் எடுத்தது. தற்பொழுது சென்னை சூப்பர் கிங்ஸ் அணயில் 25 வீரர்கள் உள்ளனர்.