ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் புதிய ஜெர்சியில் களம் இறங்கும் இந்திய அணி.!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் புதிய ஜெர்சியில் களம் இறங்கும் இந்திய அணி.!

By : Pravin kumar
ஐபிஎல் 2020 தொடர் சிறப்பான முறையில் ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற்று முடிவடைந்துள்ளது. ஐபிஎல் தொடரில் பங்கெற்ற அனைத்து வீரர்களும் நாடு திரும்பிய நிலையில் இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியா தொடருக்காக ஐபிஎல் இறுதி போட்டி முடிவடைந்த அடுத்த நாளை ஆஸ்திரேலியா பறந்துள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணி மூன்று ஒரு நாள் போட்டி, மூன்று டி-20 போட்டி மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது.
அதற்கு முன்தாக அனைத்து வீரர்களும் 14 தனிமைபடுத்தப்பட்டு பின்னர் பயிற்சியில் ஈடுபட உள்ளனர். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் மூன்று வீதமான தொடருக்கான இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியா சென்றடைந்தனர்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் புதிய ஜெர்யில் களம் இறங்க இந்திய அணி திட்டமிட்டுள்ளது. இந்த புதிய ஜெர்சி இந்திய அணியின் பழைய ஜெர்சி போன்று உள்ளது. இந்திய அணியை பொறுத்து வரையில் இளம் ப்ளு நிறத்தில் தான் ஜெர்சி கடந்த சில ஆண்டுகளாக அணிந்த நிலையில் நிண்ட நாட்களுக்கு பிறகு டார்க் ப்ளு நிறத்தில் புதிய ஜெர்சியை வெளியிட்டுள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி -30 தொடரில் இந்த ஜெர்சியுடன் தான் விளையாட உள்ளது.
