Kathir News
Begin typing your search above and press return to search.

பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு இவர்கள் காரணம் கோலியின் கருத்து.!

பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு இவர்கள் காரணம் கோலியின் கருத்து.!

பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு இவர்கள் காரணம் கோலியின் கருத்து.!

Pravin kumarBy : Pravin kumar

  |  26 Feb 2021 2:45 PM GMT

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது போட்டி கடந்த 24ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112 ரன்களை குவிக்க அடுத்ததாக இந்திய அணி 145 ரன்கள் குவித்தது. 33 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணி 81 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.அதனை தொடர்ந்து 48 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரில் 2 க்கு 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த போட்டி இரண்டே நாளில் முடிவடைந்துள்ளது ரசிகர்களிடையே சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது. மேலும் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த இந்த ஆடுகளத்தில் 28 விக்கெட்டுகளை சுழற்பந்துவீச்சாளர்கள் கைப்பற்றப்பட்டது.இந்நிலையில் இந்த மைதானம் மீது பலரும் தங்களது அதிர்ப்தியான கருத்துகளையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறுகையில் : உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் இந்த போட்டியில் எங்களது பேட்டிங் தரமாக அமையவில்லை. 3 விக்கெட்டுகளை இழந்து இருக்கும்போது 100 ரன்களை கடந்த நாங்கள் அடுத்து 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது சற்று ஏமாற்றமாக இருந்தது.இருப்பினும் இந்த போட்டியின் மைதானத்தில் உள்ள தன்னை காரணமாக விக்கெட்டுகளை தொடர்ந்து இழந்தோம். முதல் இன்னிங்சில் போது மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைந்தது. அதன் பின்னர் முழுவதுமாக பந்துவீச்சுக்கு மைதானம் சாதகமானது. டெஸ்ட் போட்டியில் தடுப்பாட்டம் என்பது மிகவும் அவசியம் என்பதை இந்த போட்டி உணர்த்துகிறது.இந்த போட்டியில் இருபது முதல் முப்பது விக்கெட்டுகள் நேரான பந்துகளில் விழுந்தவை மைதானத்தில் இருந்த தன்மையே விக்கெட்டுகள் விழ காரணமாக அமைந்தது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News