மூன்றாவது டெஸ்ட் போட்டி: அஸ்வின் மற்றும் விஹாரியின் தடுப்பாட்டத்தால் டிராவில் முடிந்தது.!
மூன்றாவது டெஸ்ட் போட்டி: அஸ்வின் மற்றும் விஹாரியின் தடுப்பாட்டத்தால் டிராவில் முடிந்தது.!

By : Pravin kumar
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிடனியில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்க் செய்தது. முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா அணியில் ஸ்டிவ் ஸ்மிதின் சதத்தால் ஆஸ்திரேலியா அணி 334 ரன்கள் சேர்த்தது. பின்னர் விளையாடிய இந்திய அணியில் புஜாரா மற்றும் சுக்மன் கில் அரைசதத்தால் 244 ரன்கள் மட்டுமே அடித்தது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 96 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் லபுசானே மற்றும் ஸ்மித் அதிரடியாக விளையாட கிரின்ஸ் அரைசதம் வீளாசிய நிலையில் ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்ஸில் 312 ரன்கள் அடித்து டிக்ளெர் செய்தது. இந்திய அணிக்கு 407 ரன்களை இலக்காக நிர்ணயித்த ஆஸ்திரேலியா அணி.
பின்னர் விளையாடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா அரைசதம் வீளாசி அவுட் ஆக பின்னர் வந்த புஜாரா நிலையான ஆட்டத்தை வெளிபடுத்த கேப்டன் ரஹானே வந்த வேகத்தில் அவுட் ஆகினார்.

பின்னர் வந்த பண்ட் அதிரடியாக 97 ரன்கள் அடிக்க இந்திய அணி சற்று வலுப்பெற்றது. பின்னர் புஜாரா மற்றும் பண்ட் ஜோடி அவுட் ஆக இந்திய அணி சற்று கலக்கம் கண்ட நிலையில் அஸ்வின் மற்றும் விஹாரி இருவரும் தடுப்பாட்டத்தை கையில் எடுத்தனர். 43 ஓவர்கள் தடுத்தாடிய இந்த ஜோடி போட்டியை டிராவில் முடித்தது. ஆட்டநாயகனாக ஸ்மித் தேர்வு செய்யப்பட்டார்.
