இந்த ஐபிஎல் மேல்க்ஸ்வெல், கிறிஸ்டின் போன்ற அதிரடி வீரர்களுடன் களம் இறங்கும் ஆர்சிபி.!
இந்த ஐபிஎல் மேல்க்ஸ்வெல், கிறிஸ்டின் போன்ற அதிரடி வீரர்களுடன் களம் இறங்கும் ஆர்சிபி.!
By : Pravin kumar
ஐபிஎல் 14வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடருக்கான ஏலம் கடந்த 18ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 292 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்ற நிலையில் 57 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். 57 வீரர்களில் 22 வெளிநாட்டு வீரர்களும் 29 இந்திய அணியில் இடம்பெறாத இளம் வீரர்களும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
இந்த ஏலத்தில் பெரிய அளவில் தங்கத்தை ஏற்படுத்தியது பெங்களூரு அணி தான். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் போட்டியில் கோப்பையை வென்றது கிடையாது, உலகின் தலைசிறந்த வீரர்கள் விராட் கோலி,ஏபி டிவில்லியர்ஸ் போன்ற வீரர்கள் இருந்தும் அந்த அணி ஒரு முறை கூட வெற்றி பெறாதது கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் ரசிகர்களிடத்தில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்தாண்டு எப்படியாவது டைட்டில் பட்டத்தை வெற்றி பெற வேண்டும் என்று கனவுடன் களமிறங்கிய பெங்களூரு அணி மோசமான பந்து வீச்சால் அந்தக் கனவில் மண்ணள்ளிப் போட்டது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆரோன் பின்ச் , உமேஷ் யாதவ் மற்றும் டேல் ஸ்டைன் போன்ற வீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை.இதனால் அந்த அணியின் முக்கிய வீரர்களாக இருந்த உமேஷ் யாதவ், மொயின் அலி மற்றும் ஆரோன் பின்ச் போன்ற நட்சத்திர வீரர்களை அந்த அணி விடுவித்தது, 2021 கான ஐபிஎல் போட்டியில் எப்படியாவது வெற்றி கோப்பையை பெற்று விட வேண்டும் என்ற முனைப்போடு காத்திருக்கும் அணி மிக சிறப்பான திட்டத்தை தீட்டி மிகச் சிறந்த வீரர்களை தங்களது அணியில் சேர்த்தது.
பலசிறந்த வீரர்களை தனது அணியில் சேர்த்து இருக்கும் பெங்களூர் அணி 2021 ஐபிஎல் போட்டியில் வெற்றி பெறுமா என்று கிரிக்கெட் வல்லுநர்கள் மட்டும் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர், இந்த ஐபிஎல் போட்டியிலும் ஆர்சிபி அணி சிறப்பாக செயல்படவில்லை என்றால் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு மிகப் பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேக்ஸ்வெல் 14.25 கோடி, கையில் ஜேம்சன் 15 கோடி, டேனியல் கிறிஸ்டின் 4.8 கோடி, அசாரூதின் 20 லட்சம், சச்சின் பேபி 20 லட்சம் , கே எஸ் பரத் 20 , பிரபுசாதேவ் 20 லட்சம்