இந்த ஐபிஎல் சீசனில் இது தான் என் பிளேன் அதை சிறப்பாக செய்து வருகிறேன் - ரஷித் கான்.!
இந்த ஐபிஎல் சீசனில் இது தான் என் பிளேன் அதை சிறப்பாக செய்து வருகிறேன் - ரஷித் கான்.!

By : Pravin kumar
ஐபிஎல் தொடரின் எலிமினேடர் போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் புள்ளி பட்டியலில் மூன்றாவது மற்றும் நான்காவது இடம் பிடித்த சன்ரைசர்ஸ் ஐத்ராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் விளையாடிய பெங்களுரு அணியில் தொடக்க வீரர் வீராட் கோலி மற்றும் படிக்கல் களம் இறங்க வீராட் கோலி 6 ரன்னில் வெளியேற பின்னர் வந்த படிக்கல் 1 ரன்னில் வெளியேற அடுத்து வந்த பின்ச் மற்றும் டிவில்லியர்ஸ் இருவரும் சிறிது நேரம் நிலைத்து விளையாட பின்ச் 32 ரன்னில் வெளியேற பின்னர் நிலைத்து விளையாடிய டி வில்லியர்ஸ் அரைசதம் வீளாசினார். பெங்களுரு அணி 131/7 ரன்கள் சேர்த்தது. பின்னர் விளையாடிய ஐத்ராபாத் அணியில் தொடக்க வீரர்கள் சொதப்பினாலும் வில்லியம்சன் மற்றும் ஹோல்டர் உதவியுடன் வென்றது.

இந்நிலையில் நேற்று போட்டி முடிந்து பேசிய சன் ரைசர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் கூறுகையில் : இந்த போட்டி மிகவும் கடினமாக இருந்தது. இருப்பினும் இறுதியில் வெற்றி பெற்ற அணியில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பஞ்சாப் அணிக்கு எதிராக நாங்கள் எவ்வாறு விளையாடினோமோ அதேபோன்று தவறு செய்யக்கூடாது என்பதால் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடினோம்.
நான் என்னுடைய பந்துவீச்சில் சரியான ஏரியாவில் பந்தை வீசினேன். மேலும் சரியான இடத்தில் பந்து வீசினால் தானாக விக்கெட்டுகள் விழும் என்பது என்னுடைய கருத்து. இதனாலேயே இந்த போட்டியில் அதே போன்று தொடர்ந்து வீசினேன். என்னுடைய பந்துவீச்சு இந்த மைதானத்தில் ஒத்துழைக்கிறது. அதனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றி வருகிறேன்.
