சாஹாவிற்கு இதுதான் கடைசி டெஸ்ட் போட்டி பி.சி.சி.ஐ. அதிரடி முடிவு!
சாஹாவிற்கு இதுதான் கடைசி டெஸ்ட் போட்டி பி.சி.சி.ஐ. அதிரடி முடிவு!

By : Pravin kumar
இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. முதல் டெஸ்ட் போட்டி அடிலேட் மைதானத்தில் நடைபெற்ற நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகவும் மோசமான முறையில் தோல்வியை தழுவியது.
இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 36 ரன்கள் மட்டுமே அடித்து ஆல் அவுட் ஆனது மிகபெரிய தோல்வியாக பார்க்கப்படுகின்றது. இந்த தோல்விக்கு காரணமாக கூறப்படுவது இந்திய அணியில் வீரர்களின் தேர்வு சரியில்லாமல் இருந்தது தான் என கூறப்படுகின்றது.

பிரித்திவ் ஷா மற்றும் சாஹா இருவரும் அணியில் சேர்த்தது தவறு என முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பிரித்திவ் ஷாவிற்கு பதிலாக சுக்மன் கில் களம் இறங்க வேண்டும் என முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பே கருத்து பேசப்பட்ட நிலையில் வீராட் கோலி பிரித்திவ் ஷாவை தேர்வு செய்து களம் இறக்கினார்.
ஆனால் பிரித்திவ் ஷா வழக்கம் போல் டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்நிலையில் சாஹா இனி இந்திய டெஸ்ட் அணியில் களம் இறங்குவது கடினம் என கூறப்படுகின்றது.

அவர் டெஸ்ட் போட்டிகளில் தற்பொழுது சரியாக விளையிடுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே சாஹா டி-20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கே.எல் ராகுல் அல்லது ரிஷப் பண்ட் களம் இறங்க வாய்ப்பு உள்ளது. அதே போல் ரவிந்திர ஜடேஜா களம் இறங்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது.
