Kathir News
Begin typing your search above and press return to search.

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி ஜூன் மாதம் தொடக்கம்!

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி ஜூன் மாதம் தொடக்கம்!

ThangaveluBy : Thangavelu

  |  12 April 2022 1:57 PM GMT

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பாக டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 2016ம் ஆண்டு முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போட்டியில் 8 அணிகள் பங்கேற்க உள்ளது.

தற்போது வரையில் 5 டி.என்.பி.எல். போட்டிகள் முடிந்துள்ளது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மூன்று முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. மேலும், டூட்டி பேட்ரியாட்ஸ் 2016, மதுரை பாந்தர்ஸ் 2018ம் ஆண்டிலும் தலா ஒரு முறை கோப்பையை வென்றுள்ளது. இதன் பின்னர் கடந்த 2019ம் ஆண்டுக்கு பின்னர் கொரோனா தொற்றால் போட்டிகள் நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில், 6வது டி.என்.பி.எல். போட்டி ஜூன் இறுதியில் தொடங்க இருப்பதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கான வீரர்கள் தேர்வும் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Maalaimalar

Image Courtesy: The Sports Rush

Next Story
கதிர் தொகுப்பு
Trending News