இன்று சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சச்சின் காலடி வைத்த நாள்.!
இன்று சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சச்சின் காலடி வைத்த நாள்.!

By : Kathir Webdesk
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் 1989ம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சியில் நடைபெற்ற சர்வதேச டெஸ்ட் போட்டியில் முதன் முறையாக கலந்து கொண்ட நாள் இன்று.
அந்த போட்டியில் முதன் இன்னிங்சில் மட்டும் பேட்டிங் செய்த சச்சின் 15 ரன்கள் எடுத்தார். மேலும், கடந்த 2013ம் ஆண்டு வெஸ்ட் இண்டியனுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சச்சின் இறுதியா களமிறங்கினார். இதுவரை 200 டெஸ்டில் விளையாடி 15,921 ரன்கள் எடுத்து சர்வதேச போட்டியில் தனி முத்திரையாக பதித்துள்ளார்.
மேலும், இவர் எல்லா காலங்களிலும் அனைத்து வீரர்களிடமும் விளையாடியுள்ளார். இந்தியாவின் மிகச்சிறந்த வீரராகவும் திகழ்ந்து வந்தார். இவரது சாதனையை போற்றும் வகையில் இந்திய அரசு 1994ம் ஆண்டில் அர்ஜீனா விருதும், 1997ம் ஆண்டில் விளையாட்டுத்துறையின் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதையும் பெற்றுள்ளார்.
1999ம் ஆண்டு இந்தியாவின் குடிமை விருதுகளில் நான்காவதாக கருதப்படும் பத்மஸ்ரீ விருதையும், 2008ல் 2வதாக கருதப்படும் பத்ம விபூசண் விருதினையும் பெற்றுள்ளார். கடந்த 2013ம் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதையும் பெற்று விளையாட்டு வீரர்களுக்கு இன்றும் ரோல் மாடலாக திகழ்ந்து வருகிறார்.
