Kathir News
Begin typing your search above and press return to search.

TOP திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா.. விளையாட்டு வீரர்களுக்கு மத்திய அரசின் சிறப்பு கவனம்..

TOP திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா.. விளையாட்டு வீரர்களுக்கு மத்திய அரசின் சிறப்பு கவனம்..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  27 July 2023 1:56 AM GMT

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஆயத்தங்களை உறுதி செய்வதற்கும், மேலும் நமது விளையாட்டு வீரர்களின் பங்கேற்பை அதிகரிப்பதற்கும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் இந்திய விளையாட்டு ஆணையம் மூலம் பல முன் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்கில் இந்தியாவின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக, இந்த அமைச்சகம் 2014 முதல் ஒலிம்பிக் பதக்க மேடை இலக்குத் திட்டத்தை (டாப்ஸ்) செயல்படுத்தி வருகிறது.


இந்தத் திட்டத்தின் கீழ் முக்கிய சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்கு அடையாளம் காணப்பட்ட விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான வெளிநாட்டுப் பயிற்சி, சர்வதேசப் போட்டி, உபகரணங்கள், உடற் பயிற்சியாளர் போன்ற சேவைகள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் அரசு வழங்குகிறது. மேலும், மையக் குழு விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.50,000 மற்றும் மேம்பாட்டுக் குழு விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.25,000 வழிச்செலவுக்கு வழங்கப்படுகிறது.


தற்போது, இந்தத் திட்டத்தின் கீழ் 103 தனிப்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் 2 ஹாக்கி அணிகள் முக்கிய குழுவாக தெரிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்தியாவின் ஒலிம்பிக் தயாரிப்பில் கவனம் செலுத்தும் அணுகுமுறையை உறுதி செய்வதற்காக டாப்ஸ் மேம்பாட்டுக் குழுவின் கீழ் 166 சிறந்த விளையாட்டுத் திறமையாளர்களின் திறமைகளை அடையாளம் காணும் பணி நிறைவடைந்துள்ளது. இந்திய விளையாட்டு ஆணையத்தின் விளையாட்டு வசதிகளைப் பொறுத்தவரை, கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.612.51 கோடி மதிப்பிலான 29 விளையாட்டு உள்கட்டமைப்புத் திட்டங்களை அது மேற்கொண்டுள்ளது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News