ஐபிஎல் இன்றைய போட்டி: பெங்களூரு - பஞ்சாப், கொல்கத்தா- ஐதராபாத் மோதுகிறது!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று (அக்டோபர் 3) இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது.
By : Thangavelu
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று (அக்டோபர் 3) இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. கொரோனா தொற்று காரணமாக போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று இந்திய நேரப்படி 3.30 மணியளவில் ஷார்ஜாவில் நடைபெறும் முதல் போட்டியில் பெங்களூரு அணியும், பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது.
இந்த இரண்டு அணிகளும் இதுவரை 27 போட்டியில் நேருக்கு நேராக மோதியுள்ளது. இதில் 15 முறை பஞ்சாப் அணியும், 12 முறை பெங்களூரு அணியும் வெற்றி பெற்றுள்ளது. இன்றை போட்டியில் இரண்டு அணிகளுக்கும் நடைபெறும் போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று கூறப்படுகிறது.
மேலும், துபாயில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகின்ற மற்றொரு ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர் ஐதராபாத் அணியும் மோதுகிறது. இந்த இரண்டு அணிகளும் இதுவரை 20 முறை மோதியுள்ளது. இதில் ஐதராபாத் 7 முறையும், கொல்கத்தா 12 முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு எதுவும் எட்டப்படாமல் இருக்கிறது. தற்போதைய ஆட்டத்தில் கொல்கத்தா அணிக்கு வாழ்வா சாவா என்ற கட்டத்தில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Puthiyathalamurai