பாகிஸ்தானிற்க்கு சுற்றுபயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து - அட்டவனை வெளியிட்டது கிரிக்கெட் வாரியம்.!
பாகிஸ்தானிற்க்கு சுற்றுபயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து - அட்டவனை வெளியிட்டது கிரிக்கெட் வாரியம்.!

By : Pravin kumar
இங்கிலாந்து அணி கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானிற்கு சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளது. இதனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது. இங்கிலாந்து அணி பாகிஸ்தான் சென்று டி-20 தொடரில் பங்கேற்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பல ஆண்டுகளாக இந்திய அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொள்வது இல்லை. அதே போல் மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் தங்களது வீரர்களை பாகிஸ்தான் அனுப்ப அச்சம் கொண்டிருந்ததால், இரு நாடுகளுக்கும் பொதுவான இடமான துபாய் மற்றும் அபுதாபி மைதானங்களில் கிரிக்கெட் தொடர்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் தற்போது பாக்., நாட்டில் தீவிரவாதம் குறைந்துள்ளதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீண்டும் மற்ற நாட்டின் அணிகளை தங்களது நாட்டிற்கு அழைத்து கிரிக்கெட் விளையாட கோரிக்கை விடுத்து வருகிறது.
கடந்த 2009ம் ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணி வீரர்கள் சென்று கொண்டிருந்த பேருந்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் அதிர்ஷ்டவசமாக வீரர்கள் சிறு காயங்களுடன் தப்பினர். அதன் பிறகு இலங்கை அணியும் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போவதில்லை என முடிவு செய்தது. இந்நிலையில் இந்த ஆண்டு துவக்கத்தில் பாதுகாப்பை உறுதி செய்த பிறகு இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் சென்று டெஸ்ட் தொடரில் விளையாடி நாடு திரும்பினர். அதன்பிறகு ஜிம்பாப்வே அணி பாகிஸ்தான் சென்று லிமிடெட் ஓவர் போட்டிகளில் விளையாடியது.
இதை தொடர்ந்து வரும் 2021 ஆம் ஆண்டு அகடோபர் மாதம் இங்கிலாந்து அணி பாகிஸ்தான் சென்று 14 மற்றும் 15 ஆகிய இருதினங்களில் டி-20 தொடரில் பங்கேற்க உள்ளது. அதன் பின்னர் இந்தியாவில் நடைபெறும் டி-20 உலககோப்பை தொடரில் இங்கிலாந்து அணி பங்கேற்க உள்ளது.
