ஏழாவது முறையாக ப்யர் பிளே அவார்ஸ்-ஐ வென்று அசத்திய சென்னை அணி.!
ஏழாவது முறையாக ப்யர் பிளே அவார்ஸ்-ஐ வென்று அசத்திய சென்னை அணி.!

By : Pravin Pravin
ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 56 லீக் போட்டிகள் முடிவடைந்து பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தயார் ஆகி வருகின்றது. பிளே ஆப்ஸ் சுற்றுக்கு மும்பை இன்டியன்ஸ் , டெல்லி கேப்பிடல்ஸ் , சன்ரைசர்ஸ் ஐத்ராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு ஆகிய அணிகள் தேர்வாகி உள்ளனர். மும்பை மற்றும் டெல்லி அணிகள் முதல் இரண்டு இடத்தை பிடித்து முதல் குவாலிபையர்ஸ் போட்டியில் மோத உள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் , ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் தொடரை விட்டு வெளியேறிவிட்டனர். இந்நிலையில் இந்த சீசனுக்கான ப்யர் பியே அவாட்ஸ் ஐ சென்னை சூப்பர்.கிங்ஸ் அணி வென்றுள்ளது. இது சென்னை அணிக்கு ஏழாவது ப்யர் பிளே அவார்ஸ் ஆகும். ஆண்டு தோறும் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி போட்டியில் எந்த வீத பிரச்சனைகள் இன்றி சிறப்பாக செயல்படும் அணிகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகின்றது.
இதுவர நடைபெற்றுள்ள 13 சீசனில் ஏழு முறை சென்னை அணி மட்டுமே இதை வென்று அசத்தி உள்ளது. காரணம் சென்னை அணியில் தோனியின் செயல்பாடுகள் அவ்வாரு இருந்து வருகின்றன. சென்னை அணியில் தோனி கட்டுபாட்டில் உள்ளதால் சென்னை அணி இந்த சிறப்பை பெற்று வருகின்றது. இது வரை 2008, 2010, 2011, 2013, 2014, 2015 மற்றும் 2020 ஆகிய முறை வென்று அசத்தி உள்ளது.
