விராட் கோலிக்கும், கம்பீருக்கும் இடையே நடந்த மோதல்.. 100% கட்டண அபராதம்..
பெங்களூரு மற்றும் லக்னோ இடையிலான ஐபிஎல் தொடரின் போது கோலிக்கும், கம்பீருக்கும் ஏற்பட்ட பிரச்சனை.
By : Bharathi Latha
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ நேற்று முன்தினம் பெங்களூரு அணியை எதிர்கொண்டது. குறிப்பாக லக்னோ அணி பெங்களூர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் களுக்கு 126 ரன்கள் எடுத்திருந்தது. இந்த சிறிய இலக்கை கூட எடுக்க முடியாமல் லக்னோ அணி 108 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. குறிப்பாக ஆட்ட நேரத்தின் போது லக்னோ அணி பேட்டிங் செய்த பொழுது ஃபீல்டிங்கில் நின்ற பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி மிகவும் கோபமாகவும் ஆக்ரோஷமாகவும் செயல்பட்டார்.
விக்கெட் வீழ்த்த வீழ்த்திய போதெல்லாம் ஆவேசமாக அவர் அப்பொழுது ரசிகர்களை நோக்கி ஆதரவு குரல் எழுப்பும்படி சைகைகள் மூலம் கேட்டுக்கொண்டு இருந்தார்.17 வது ஓவர் பேட்டிங் செய்து கொண்டிருந்த லக்னோ வீரர், விராட் கோலி குறித்து ஏதோ நடுவரிடம் புகார் தெரிவிக்க இருவருக்கிடையே பிரச்சனை ஆரம்பமானது. பிறகு இரண்டு வீரர்களுக்கு இடைய பிரச்சனை ஆரம்பத்தில் இருந்தே இருந்து இருந்து கொண்டே இருந்தது.
இவற்றை தடுக்க லக்னோ அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் அங்கு இருந்த அந்த வீரரை அழைத்து சென்றார். கோபத்தில் விராட் கோலி வார்த்தைகளை கூற கம்பீர் பதிலுக்கு விராட் கோலியை நோக்கி பேசியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவர்களுக்கு இடையே காரசாரமான விவாதம் எழுந்தது. சிறிது நேரம் இந்த ஒரு விவாதம் எழுந்து தன் காரணமாக மூன்று பேருக்கும் ஐபிஎல் நிர்வாகம் அதிரடியாக அபராத கட்டணத்தை விதித்து இருக்கிறது. சுமார் போட்டி கட்டணத்தில் 100% அபராதமாக அவர்கள் செலுத்த வேண்டும் என்று கூறுகிறது.
Input & Image courtesy: NDTV News