ICC கோப்பை வெல்ல முடியாததால் கேப்டனாக ஒதுக்கப்பட்டேன்: விராட் கோலி ஆதங்கம்!
ICC கோப்பை வெல்ல முடியாத ஒரு காரணத்திற்காக தோல்வியடைந்த கேப்டனாக தற்போது நான் ஒதுக்கப்படுவதாக விராட் கோலி கூறியிருக்கிறார்.
By : Bharathi Latha
ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் தற்பொழுது மார்ச் கடைசி தொடங்கி மே 28ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தற்பொழுது பெங்களூர் ராயல் சேலஞ்சர் அணி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேப்டன் விராட் கோலி கூறுகையில், தனது மனதில் உள்ள பல்வேறு ரகசியங்களை தற்பொழுது முன்வைத்து இருக்கிறார். குறிப்பாக முன்னாள் கேப்டன் தோனியுடன் நட்பு குறித்து விளக்கமாகவும் அவர் பேசி இருக்கிறார்.
நீங்கள் போட்டிகளை வெல்வதற்காக தான் விளையாடுகிறீர்கள். 2017 ஆம் ஆண்டு சாம்பியன் கோப்பை, 2019 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை, முதலாவது உலக டெஸ்ட் போட்டி சாம்பியன்ஷிப், 2021 ஆம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை ஆகிய சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக நான் இருந்திருப்பதாகவும் அந்த போட்டிகளில் நமது அணி வெல்லாததால் ஒரு பகுதி கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் ரசிகர்களால் நான் தோல்வி அடைந்த கேப்டன் என்று தான் முத்திரை கூறப்பட்டதாகவும் அவர் பேசி இருக்கிறார்.
2011 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் ஒரு வீரராக தான் இருந்து இருப்பதாகவும், அவர் குறிப்பிட்டு இருக்கிறார் 2013 ஆம் ஆண்டு சாம்பியன் கோப்பை வென்று அணியில் இடம் பெற்றுவிட்டேன். ஆனால் டெஸ்ட் போட்டி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை ஐந்து முறை பெற்ற அணியிலும் அங்கம் வகித்து இருக்கிறேன்.
இதுவரை உலக கோப்பையை வெல்லாதவர்கள் இருக்கிறார்கள் என்னிடம் இருப்பதற்கு எப்போதும் நன்றி உள்ளவனாக இருக்கிறேன். டெண்டுல்கர் தனது ஆறாவது முயற்சி தான் உலகக் கோப்பை வென்றார். நான் எனது முதல் போட்டியிலேயே உலக கோப்பையை வென்று இருக்கிறேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
Input & Image courtesy: Dinamalar