Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியா அணிக்கு எதிரான தொடரில் இந்த தவறை செய்யவே மாட்டேன் - வார்னர் அசத்தல் பேட்டி.!

இந்தியா அணிக்கு எதிரான தொடரில் இந்த தவறை செய்யவே மாட்டேன் - வார்னர் அசத்தல் பேட்டி.!

இந்தியா அணிக்கு எதிரான தொடரில் இந்த தவறை செய்யவே மாட்டேன் - வார்னர் அசத்தல் பேட்டி.!

Pravin kumarBy : Pravin kumar

  |  24 Nov 2020 3:34 PM GMT


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்களுக்கு இடையேயான தொடர் தான் தற்பொழுது கிரிக்கெட் வட்டரத்தில் பெரிய எதிர்பார்ப்புடன் உள்ள தொடர் ஆகும். இந்த தொடருக்காக இந்திய அணி ஐபிஎல் முடிவடைந்த கையோடு ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்று திவிர பயிற்ச்சியில் ஈடுப்பட்டு வருகின்றது.

இந்த சுற்றுபயணத்தில் இந்தியா அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மூன்று டி-20 மற்றும் மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் கடுமையான பயிற்சியில் உள்ளன. மூன்று வீதமான தொடருக்கான இந்திய அணி வீரர்களும் ஆஸ்திரேலியா சென்றடைந்துள்ளனர்.


இந்நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா தொடரை பற்றி டேவிட் வார்னர் பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : எனக்கு சமீபத்தில் 34 வயது பிறந்தது. சர்வதேச கிரிக்கெட்டில் இன்னும் எனக்கு மீதமுள்ள நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்தியாவுக்கு எதிரான இந்த தொடரில் வாக்குவாதத்தின் மூலம் என்னை வம்புக்கு இழுத்தால் அதிலிருந்து நான் விலகிச் செல்லவே விரும்புவேன்.

இந்த தொடரில் நான் எப்போதும் ஸ்லெட்ஜிங் செய்யவே மாட்டேன். காலப்போக்கில் நான் கிரிக்கெட்டில் கற்றுக்கொண்ட பாடம் இதுதான். என்னை சீண்டுபவர்களை எதிர்த்து நான் மீண்டும் வாக்குவாதம் செய்யாமல் எனது பதிலை பேட் மூலம் கொடுக்க முயற்சிப்பேன். ஏனெனில் போட்டியின் இடையே ஸ்லெட்ஜிங் செய்யும் பொழுது போட்டியில் கவனச் சிதைவு ஏற்படுகிறது.

இதனால் இந்த தொடரில் இந்த தவறை மட்டும் நான் செய்யவே மாட்டேன். ஒருநாள் போட்டியை பொறுத்தமட்டில் நல்ல துவக்கம் கொடுப்பதுடன் மிடில் ஓவர்களில் ரன்ரேட்டை மெயின்டெயின் செய்து விளையாட வேண்டும் என நினைக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் எனது வழக்கமான ஆக்ரோஷத்தை குறைத்து சிறப்பாக விளையாடி வருகிறேன் என்று வார்னர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News