Kathir News
Begin typing your search above and press return to search.

மூன்றாவது ஒரு நாள் போட்டி மற்றும் டி-20 தொடரில் இருந்து வார்னர் விலகல்.!

மூன்றாவது ஒரு நாள் போட்டி மற்றும் டி-20 தொடரில் இருந்து வார்னர் விலகல்.!

மூன்றாவது ஒரு நாள் போட்டி மற்றும் டி-20 தொடரில் இருந்து வார்னர் விலகல்.!

Pravin kumarBy : Pravin kumar

  |  30 Nov 2020 8:31 PM GMT


இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்நிலையில் இதனை அடுத்து இரண்டாவது போட்டி சிட்னி நகரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 389 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் சதம் அடித்தார். அவரைத்தவிர வார்னர், பின்ச், லாபுஷன் மேக்ஸ்வெல் என நால்வரும் அரைசதம் அடித்தனர்.

அதன் பின்னர் 390 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி மீண்டும் 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்திய அணி சார்பாக கேப்டன் கோலி 87 பந்துகளில் 89 ரன்களையும், ராகுல் 66 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 76 ரன்களை குவித்தார்.

பேட்டிங் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இருந்தாலும் இந்த போட்டியிலும் இந்திய அணியின் மோசமான பந்து வீச்சினாலே தோல்வி கிடைத்தது.ஆட்டநாயகனாக ஸ்மித் தேர்வானார்.

இப்போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கையில் 4வது ஓவர் வீசப்பட்டுக் கொண்டிருந்தபோது, வார்னர் தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கீழே விழுந்தார். இவரை உடற்தகுதி நிபுணர் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் கைத்தாங்களாக வெளியே அழைத்து சென்றனர். அதன்பிறகு காரில் ஏறிச் சென்ற வார்னர் ஸ்கேன் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அப்போது இவரது காயம் தீவிரமாக இருப்பதை அறிந்த மருத்துவர்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு கட்டாய ஓய்வு தேவை என குறிப்பிட்டிருந்தனர். அதனால் அவர் மூன்றாவது ஒருநாள் போட்டி மற்றும் டி20 தொடர் என இரண்டையும் ஆட முடியாது என அணி நிர்வாகம் குறிப்பிட்டிருந்தது.

மேலும் வருகிற டிசம்பர் 17 ஆம் தேதி துவங்கும் டெஸ்ட் தொடருக்கு முன்பாக அவர் குணமடைந்துவிட்டால் தொடர்ந்து ஆடலாம் இல்லை எனில் டெஸ்ட் தொடரில் இருந்தும் அவர் நீக்கப்படுவார் என தெரிவித்திருந்தது. அவருக்கு பதிலாக டி சார்ட் அணியில் இணைந்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News