இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் டேவிட் வார்னர் இல்லையா?
இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் டேவிட் வார்னர் இல்லையா?

By : Pravin kumar
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் பிரமாண்டமாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றது. முதல் டெஸ்ட் போட்டி கடந்த 17 ம் தேதி அடிலெட் மைதானத்தில் நடைபெற்ற நிலையில் இந்திய அணியின் மோசமான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா அணி அசத்தல் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக நடைபெற உள்ளது. இந்த டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி விளையாடாத நிலையில் இந்திய அணிக்கு கேப்டனாக அஜிங்கே ரஹானே வழி நடத்த உள்ளார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பல மாற்றங்களுடன் களம் இறங்க உள்ளது. பிரித்திவ் ஷா மற்றும் சாஹா போன்ற வீரர்கள் கழட்டி விடப்பட உள்ளனர்.

அவருக்களுக்கு பதிலாக சுக்மன் கில் மற்றும் பண்ட் இருவரும் அணியில் இணைவர் என எதிர்பார்க்கபடுகின்றது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் ஒரு நாள் தொடரின் போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்காத நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நிச்சயம் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் டேவிட் வார்னர் விலகி உள்ளார். இது ஆஸ்திரேலியா அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
