இந்தியாவிலும் நாங்க வெற்றி பெறுவோம் ஜோப்ரா ஆர்ச்சர் கருத்து!
இந்தியாவிலும் நாங்க வெற்றி பெறுவோம் ஜோப்ரா ஆர்ச்சர் கருத்து!
By : Pravin kumar
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் முடித்திருக்கும் இந்திய அணியும் இலங்கையில் சுற்றுப்பயணம் முடித்திருக்கும் இங்கிலாந்து அணியும் அடுத்தாக மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் 4 டெஸ்ட் போட்டிகள், 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்குபெற்று விளையாட இருக்கிறது.பிப்ரவரி மாதம் 5ம் தேதியிலிருந்து இந்த இரு அணிகளுக்கிடையேயான தொடர்கள் தொடங்குகிறது.
இந்த இரு அணிகளும் முதலில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையிலுள்ள சேப்பாக்கம் மைதானத்திலும் கடைசி 2 டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்திலும் நடத்த திட்டமிட்டுள்ளனர்.இதில் மூன்றாவது டெஸ்ட் போட்டியை பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
இதையடுத்து 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய மற்றும் இங்கிலாந்து அணியை அறிவித்துள்ளனர்.இந்நிலையில் இந்திய சுழற்பந்து வீச்சை இங்கிலாந்து வீரர்கள் எளிதாக சமாளிப்பார்கள் என்று இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் “ நான் இந்தியாவில் அதிக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளேன். ஆனால் இங்கு சிவப்பு பந்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது கடினமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இந்திய ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தகுந்தவாறு இருக்கும் என்று நம்புகிறேன். இந்திய சுழற்பந்து வீச்சை எதிர் கொள்வது கடினமாக இருந்தாலும் நாங்கள் அதை எதிர்த்து விளையாடுவோம். எங்கள் அணியிலும் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்” என்று ஆர்ச்சர் கூறியிருக்கிறார்.