Kathir News
Begin typing your search above and press return to search.

கடைசி டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சு!

இரண்டு அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி இன்று கொல்கத்தாவில் இரவு 7 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் வெற்றிப்பெற்று தொடர் முழுமையாக கைப்பற்ற இந்திய அணி ஆர்வம் செலுத்தி வருகிறது.

கடைசி டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சு!

ThangaveluBy : Thangavelu

  |  20 Feb 2022 1:50 PM GMT

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 03 என்கின்ற கணக்கில் பறிக்கொடுத்தது. அதற்கு அடுத்த 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 போட்டியில் விளையாடி வருகிறது. தற்போது நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று 20 என்ற தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில், இரண்டு அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி இன்று கொல்கத்தாவில் இரவு 7 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் வெற்றிப்பெற்று தொடர் முழுமையாக கைப்பற்ற இந்திய அணி ஆர்வம் செலுத்தி வருகிறது.

அதே சமயம் இந்தியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றியாவது பெற்று தங்களின் நாட்டுக்கு திரும்ப வெஸ்ட் இண்டீஸ் அணியும் தீவிரம் காட்டி வருகிறது. இதனிடையே இந்தப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

Source, Image Courtesy: Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News