கோலிக்கு அனுப்பிய நோட்டீஸ் உண்மையா: கங்குலி விளக்கம்!
By : Thangavelu
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு விளக்கம் ஒன்று கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்பட்டது. இதனை கோலி மறுத்திருந்த நிலையில் தற்போது கங்குலி அதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடருடன் இந்திய அணியை டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இவர் சொல்லி சில நாட்களிலேயே கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகினார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனிடையே தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றது. அப்போது கோலி இனி டெஸ்ட் அணியை மட்டும் வழிநடத்தினால் போதும் என்று அவரிடம் தேர்வுக்குழு கூறியுள்ளது.
ஆனால் டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து கோலியை விலக வேண்டாம் என்று தான் கேட்டதாக கங்குலி விளக்கம் கொடுத்துள்ளார். அதே நேரத்தில் டி20 ஒருநாள் என்று இரண்டு ஷார்டர் பார்மெட் கிரிக்கெட் அணிகளுக்கும் ஒரே கேப்டன் இருந்தால் நன்றாக இருக்கும் என தேர்வுக் குழு உறுப்பினர்கள் விரும்பிய காரணத்தினால் கேப்டன் பொறுப்பிலிருந்து கோலி நீக்கப்பட்டார். ஆனால் கோலி, தன்னிடம் எந்த ஒரு தகவலையும் கூறவில்லை என்று மறுத்துவிட்டு தென்னாப்பிரிக்கா புறப்பட்டார். இவரது மவுனம் மற்றவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
இந்நிலையில், இது குறித்து விளக்கம் கேட்டு கங்குலி, கோலிக்கு நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. அதில் கங்குலி அது குறித்து விளக்கம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அது போன்று வந்துள்ள செய்திகள் உண்மையில்லை என்று கங்குலி மறுத்துள்ளார். இந்த விவகாரம் தற்போது பிசிசிஐயில் மீண்டும் புயலை கிளப்பியுள்ளது.
Source: Puthiyathalaimurai
Image Courtesy: Hindustan Times