இந்திய அணியின் ஹிட்மென் சொதப்பல் மன்னனாக மாறியது ஏன்? ரசிகர்கள் காட்டம்!
இந்திய அணியின் ஹிட்மென் சொதப்பல் மன்னனாக மாறியது ஏன்? ரசிகர்கள் காட்டம்!
By : Pravin kumar
இந்திய அதிரடி அணியின் அதிரடி தொடக்க வீரரான ரோகித் சர்மா ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் சிறப்பாக விளையாடி வருவதால் டெஸ்ட் போட்டிக்கான அணியிலும் துவக்க வீரராக களம் இறக்கப்பட்டார். டெஸ்ட் கிரிக்கெட்டில் துவக்க வீரருக்கான இடத்தை பிடித்த ரோகித் சர்மா தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வந்தார். ஆனால் கடந்த ஆஸ்திரேலிய தொடரில் இருந்து அவரது ஆட்டம் மீண்டும் மோசமாகியுள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி இரு போட்டிகளில் விளையாடிய ரோகித் சர்மா பெரிய அளவு ரன்களை குவிக்கவில்லை.அதனை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 337 ரன்கள் குவித்தது. அதில் ரோகித் சர்மா வெறும் 6 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
அதே போன்று தற்போது இரண்டாவது இன்னிங்சில் 420 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிவரும் இந்திய அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 39 ரன்கள் குவித்துள்ளது.இந்த இரண்டாவது இன்னிங்சிலும் ரோகித் சர்மா 12 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார் .
ஏற்கனவே ஆஸ்திரேலிய தொடரிலும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் தற்போதும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவர் மீது அதிருப்தி எழுந்துள்ளது. மேலும் அவரது டெஸ்ட் துவக்க வீரருக்கான இடமும் தற்போது சிக்கலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏனெனில்கடைசியாக இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ள ரோகித் அதில் ஒரு அரை சதத்தை மட்டுமே அடித்துள்ளார். இதனால் அவர் அணியில் மீண்டும் இடம் பிடிக்காமல் போவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் ஏற்கனவே இந்திய அணியின் துவக்க வீரர்கள் மயங்க் அகர்வால் மற்றும் ப்ரித்வி ஷா ஆகியோர் விளையாடி இருந்தனர்.
அவர்களது மோசமான பார்ம் காரணமாக ரோகித் சர்மா அந்த இடத்தை பிடித்து விளையாடி வருகிறார்.இந்நிலையில் மீண்டும் ரோகித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவர்களில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. இதனால் ரோகித் அடுத்த போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.