பாபர் ஆஷாம் இல்லாத பாகிஸ்தான் டெஸ்ட் அணி.. வலுவான நியூசிலாந்தை வெல்லுமா.!
பாபர் ஆஷாம் இல்லாத பாகிஸ்தான் டெஸ்ட் அணி.. வலுவான நியூசிலாந்தை வெல்லுமா.!

By : Pravin kumar
பாகிஸ்தான் அணி நியூசிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு மூன்று டி-20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. கடந்த டிசம்பர் 18 தேதி முதல் டி-20 போட்டி நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி சிறப்பான பந்து வீச்சின் மூலம் பாகிஸ்தான் அணியை தோற்கடித்து முதல் போட்டியில் வெற்றி கண்டது. இரண்டாவது டி-20 போட்டியிலும் நியூசிலாந்து அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை வென்ற நிலையில் பாகிஸ்தான் அணியில் நட்சத்திர வீரரும் பாகிஸ்தான் அணியின் கேப்டனுமான பாபர் ஆஷாம் இல்லாத நிலையில் இந்த மோசமான தோல்விக்களை பாகிஸ்தான் அணி சந்தித்து வருகின்றது.

பாபர் ஆஷாம் காயம் காரணமாக டி-20 தொடரிகளில் பங்கேற்க முடியாத நிலையில் முதல் டெஸ்ட் போட்டியிலும் பாபர் ஆஷாம் இடம் பெறமாட்டார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இது பாகிஸ்தான் அணிக்கு பெரிய இழப்பாக பார்க்கப்படுகின்றது. பாபர் ஆஷாம் மட்டும் தான் பாகிஸ்தான் அணியில் சிறந்த பேட்டிங் ஆவரேஸ் வைத்துள்ள பேட்ஸ்மேன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து பாபர் ஆஷாம் மற்றும் இமாம் உல் ஹக் இருவரும் விலகி உள்ளனர்.

முதல் டெஸ்ட் போட்டியின் பாகிஸ்தான் அணி விவரம்: முகமது ரிஸ்வான் (கேப்டன்), அபிட் அலி, அசார் அலி, பஹீம் அஷ்ரப், ஃபவாத் ஆலம், ஹரிஸ் சோஹைல், இம்ரான் பட், முகமது அப்பாஸ், நசீம் ஷா, சர்பராஸ் அகமது, சதாப் கான், ஷாஹீன் அப்ரிடி, ஷான் மசூத், சோஹைல் கான், யாசிர் ஷா
