Kathir News
Begin typing your search above and press return to search.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: நியூசிலாந்து அணி அறிவிப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: நியூசிலாந்து அணி அறிவிப்பு!

ThangaveluBy : Thangavelu

  |  4 May 2022 10:39 AM GMT

நியூசிலாந்து கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 3 டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. அதன்படி முதல் டெஸ்ட் ஜூன் 2ம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் வில்லியம்சன், சுழற்பந்து வீச்சாளர் அஜிஸ் பட்டேல், ரக்சின் ரவீந்திரா, பிரேஸ்வெல் உள்ளிட்டோரும் இடம் பிடித்துள்ளனர். புதுமுக வீரர்கள் 3 பேர் இடம் பெற்றுள்ளனர்.

வீரர்களின் பெயர் பட்டியல் வருமாறு, கேன் வில்லியம்சன், ட்ரென்ட் போல்ட், டாம் ப்ளன்டெல், மைக்கேல் பிரேஸ்வெல், டெவோன் கான்வே, கொலின் டி கிராண்ட்ஹோம், ஜேக்கப் டஃபி, கேமரூன் பிளெட்சர், மாட் ஹென்றி, கைல் ஜேமிசன், டாம் லாதம், டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், அஜாஸ் படேல், ரச்சின் ரவீந்திரா, ஹமிஷ் ரதர்ஃபோர்ட், டிம் சவுத்தி, பிளேர் டிக்னர், நீல் வாக்னர், வில் யங் உள்ளிட்டோர் ஆவர்.

Source: Malaimalar

Image Courtesy: Cricket Addictor

Next Story
கதிர் தொகுப்பு
Trending News