Kathir News
Begin typing your search above and press return to search.

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கே.எல்.ராகுல்: இந்திய டி20 அணி அதிரடி அறிவிப்பு!

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கே.எல்.ராகுல்: இந்திய டி20 அணி அதிரடி அறிவிப்பு!

ThangaveluBy : Thangavelu

  |  15 July 2022 12:10 AM GMT

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய அணி டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது 3 போட்டிகள் கொண்ட தொடரில் 10 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்து வருகிறது. இங்கிலாந்து தொடர் முடிந்த பின்னர் இந்திய அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி விராட் கோலி, பும்ரா, சாஹல் உள்ளிட்டோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. காயம் ஏற்பட்டதால் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த கே.எல்.ராகுல் மற்றும் குல்தீப் யாதவ் மீண்டும் அணிக்காக திரும்பியுள்ளனர். அதே போன்று அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்றிருந்த சஞ்சு சாம்சன் இந்த தொடரில் இடம் பிடிக்கவில்லை.

இந்திய அணி சார்பாக ரோகித் சர்மா, இஷான் கிஷன், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ஹூடா, ஷ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், பாண்ட்யா, ஜடேஜா, அக்சர் படேல், அஷ்வின், ஆர் பிஷ்னோய், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், அவேஷ் கான், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News