மகளிர் உலகக் கோப்பை: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இந்திய அணி!
By : Thangavelu
நியூசிலாந்து ஹாமில்டன் நகரில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை தொடருக்கான லீக் சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 155 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி சாதனை படைத்திருப்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 317 ரன்களை குவித்தது. இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் இரண்டு பேரும் சதம் எடுத்தனர். அதே சமயம் 318 ரன்கள் எடுத்தால் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. முதலில் களம் இறங்கிய தொடக்க ஆட்டக்காரர்கள் 100 ரன்களை அடித்தனர். இதனால் இந்திய அணி சற்று தடுமாடியது என்றே சொல்லலாம்.
இதனை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் வீராங்கணை டாட்டின் விக்கெட்டானார். அதன் பின்னர் 62 ரன்களை எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. இதனால் இந்திய அணி எளிதாக வெற்றிவாகை சூடியது.
Source, Image Courtesy: Puthiyathalaimurai