பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா இங்கிலாந்துக்கு தக்க பதிலடி தருமா?
இந்திய மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான உலகக் கோப்பைத் தொடர் போட்டி இன்று தொடங்குகிறது.
By : Bharathi Latha
10 அணிகள் இடையிலான எட்டாவது பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி இன்று தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இங்கு அங்குள்ள ஹெர்பல்கா நகரில் 2 லிக் ஆட்டங்கள் நடத்தப்படுகிறது. இதில் இந்திய நேரப்படி மாலை 6:30 மணிக்கு தொடங்குகிறது. ஆட்டங்கள் லீக் ஆட்டத்தில் ப்ரீத்தி தலைமையிலான இந்திய அணி மற்றும் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணி ஒருவரை ஒருவர் எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. இந்திய அணி முந்தைய ஆட்டங்களில் வெஸ்ட் இண்டிக்ஸ மற்றும் பாகிஸ்தான் அணிகளை பலமாக வீழ்த்தியது.
இதைப்போல் இங்கிலாந்து அணியை தனது முதல் இரண்டு ஆட்டங்களில் தோற்கடிக்குமா? என்ற ஒரு கேள்வியும் எழுந்து இருக்கிறது. இங்கிலாந்து அணி தன்னுடைய இரண்டு ஆட்டங்களிலும் அயர்லாந்து மற்றும் வெஸ்ட் இண்டிக்ஸை தோற்கடித்தது பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இங்கிலாந்து அணி மிகவும் வலுவாக இருக்கிறது. முன்னாள் சாம்பியன் ஆன இங்கிலாந்துக்கு எதிரான இந்த மோதல் இந்தியாவிற்கு நிச்சயம் கடும் சவாலாக நிறைந்திருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
சர்வதேச 2 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதி இருக்கிறது. இதில் 19 முறை இங்கிலாந்து, ஏழு முறை இந்தியாவும் வெற்றி பெற்று இருக்கிறது. இரண்டு அணிகளும் ஐந்து தடவை மோதியதில் அனைத்து அனைத்திலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது இதில் அடங்கும்.
Input & Image courtesy: Thanthi News