சர்வதேச தடகள சாம்பியன்ஷிப்: வெள்ளிப்பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா!
By : Thangavelu
அமெரிக்கா, ஓரிகான் மாநிலம், யூஜின் நகரத்தில் சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் ஈட்டி எறிதல் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா தகுதிச்சுற்றில் 83.39 மீட்டர் தூரம் எறிந்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருந்தார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் நீரஜ் சோப்ரா 88.13 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து 2வது இடத்தைப் பிடித்த நிலையில், அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இந்த வெற்றியின் மூலம் கடந்த 2003ம் ஆண்டுக்குப் பின்னர் உலக தடகள போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலையில் தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றதன் மூலம் உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற 2வது இந்திய வீரர் மற்றும் முதல் ஆண் தடகள வீரர் என்கின்ற பெருமையையும் நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார்.
Source, Image Courtesy: Maalaimalar