இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார்? ஹர்திக் பாண்ட்யாவிற்கு வரும் வாய்ப்பு!
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார்?
By : Bharathi Latha
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடர் முதலாவது ஆட்டம் மும்பையில் உள்ள ஸ்டேடியத்தில் தொடங்க இருக்கிறது. இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா குடும்ப நிகழ்ச்சி காரணமாக முதலாவது ஒரு நாள் போட்டியில் விளையாடவில்லை என்ற தகவல்கள் தற்போது வெளி வந்திருக்கிறது. அவருக்கு பதிலாக தொடக்க ஆட்டத்தில் ஆல்ரவுண்டர் ஹர்திக் அணியை வழிநடத்தி செல்ல இருக்கிறார். இது தொடர்பாக முன்னாள் இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அளித்த ஒரு பேட்டியின் போது இது பற்றி குறிப்பிடுகையில், 20 ஓவர் கிரிக்கெட்டில் ஹர்திக் கேப்டன்ஷிப் என்னை வெகுவாக கவர்ந்து இருக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தார்.
ஐ.பி.எல் குஜராத் டைட்டன்ஸ் சமீபத்தில் சர்வதேச 20 ஓவர் போட்டியில் இந்திய அணியும் சிறப்பாக வழிநடத்து இருக்கிறார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் அவர் வெற்றியை தேடி தந்தால் அதன் பிறகு அக்டோபர் மற்றும் நவம்பரில் நடக்கும் 50 ஓவர் உலகக்கோப்பை போட்டி முடிந்ததும் அவர் இந்திய அணியின் கேப்டன் ஆகி விடுவார், தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு வீரர் ஹர்திக். மிடில் வரிசையில் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய திறமைசாலி என்று கூறுகிறார்.
மேலும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய பொழுது சில குறிப்பிட்ட ஆட்டங்களில் அணிக்கு அதிரடி உத்வேகமும் தேவைப்பட்ட ஒரு சூழ்நிலையின் போது முன்வரிசையில் களம் நின்று விளையாடி இருக்கிறார். மற்ற வீரர்களை கேட்காமல் அணியை முன்னெடுத்து சொல்வதுதான் பொறுப்பை எடுத்து நடத்தும் ஒரு கேப்டனின் செயலாகும். அத்தகைய சூழலில் தான் எல்லா வீரர்களும் தன்னுடைய முழுமையான செயல்பாட்டை வெளிப்படுத்த முடியும் என்று அவர் கூறியிருக்கிறார்.
Input & Image courtesy: ABP Live News