விறுவிறுப்பாக நடைபெற இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி.. 10 அணி யார்..
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 8 அணிகள் தேர்ந்தெடுத்த பின் கடைசி இரண்டு அணிகள் எது?
By : Bharathi Latha
10 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடர் சுற்று ஜிம்பாப்வேயில் தொடங்க இருக்கிறது. குறிப்பாக முதலாவது நாளில் நடைபெறும் ஆட்டங்களில் ஜிம்பாவே மற்றும் நேபாளம் அணிகள் மோதக இருக்கிறது. அதன் பிறகு வெஸ்ட் இன்னிங்ஸ் அமெரிக்கா அணிகள் மோத இருக்கிறது. 13வது 50 ஓவர் உலகக் குப்பை இந்தியாவில் வருகின்ற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மிகவும் விமர்சியாக நடைபெற இருக்கிறது.
10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கான ஒரு நாள் உலக கோப்பை சூப்பர் லீக் போட்டி முடிவில் புள்ளி பட்டியலில் 8 முன்னணி அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உலக கோப்பை தகுதி சுற்றுக்கு நேரடியாக பங்கேற்க இருக்கிறது. ஆனால் கடைசி இரண்டு அணிகளுக்கான போட்டிகள் தற்போது நடைபெற இருக்கிறது. இந்த ஒரு தொடரில் வெற்றி பெறும் இரண்டு அணிகள் கடைசி சமயத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இடம்பெறும்.
தற்போது முதல் எட்டு இடங்களில் நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்காளதேசம், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய எட்டு நாடுகள் இடம் பெற்று இருக்கிறது. மேலும் கடைசியாக இரண்டு அணிகள் எவை என்பதை தீர்மானிப்பதற்கான ஐம்பது ஒவ்வொரு உலக கோப்பை தகுதி சுற்று போட்டி நடைபெற இருக்கிறது.
Input & Image courtesy:Maalaimalar