உலகக்கோப்பை தொடர்.. தொடர்ந்து சோதிக்கும் பாகிஸ்தான்..
உலகக் கோப்பை தொடரில் தங்கள் பங்கு பெறுவது குறித்து பாகிஸ்தான் தொடர்ந்து குழப்பத்தில் உள்ளது.
By : Bharathi Latha
உலகக்கோப்பை தொடர் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைமுறை இருக்கிறது. இதற்கு பல்வேறு நாடுகளும் சம்மதம் தெரிவித்து இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கும் ஒரு சூழ்நிலையில் பாகிஸ்தான் இதற்கு நிராகரிப்பு தெரிவித்து இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் நடக்கும் தொடர்களில் தங்களால் பங்கேற்க முடியாது என்றும், அந்த தொடரை வேறு ஏதாவது பொதுவான இடங்களில் நடத்தினாலும் அதிலும் தாங்கள் பங்கேற்க முடியாது என்றும் ஒரு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில் மீண்டும் முதலில் இருந்தா என்பது போல் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பெரிய குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த நஜீம் சேதி அந்தப் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். தற்போது அந்தப் பதவிக்கு அஸ்ரப் என்பவர் வர உள்ளார். இதன் காரணமாக பாகிஸ்தான் தன்னுடைய முடிவில் தெளிவாக வில்லை. பல்வேறு நாடுகளையும் குழப்பி வருகிறது. இது தற்போது மீண்டும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் பேசிய அவர், ஆசிய கோப்பைக்காக ஹைபிரிட் மாடல் என்ற முறையை ஆசிய கிரிக்கெட் வாரியம் கொண்டு வந்திருக்கிறது. இதனை நான் நிராகரிக்கிறேன். மேலும் இந்த ஒரு பிரச்சனை தொடர்பாக விரைவில் நாங்கள் தகுந்த தீர்வை எடுப்போம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக வர உள்ள அஷ்ரப் கூறியுள்ளார்.
Input & Image courtesy: News