இந்திய கிரிக்கெட் அணியில் பும்ரா இடம் பெறுவாரா... உடல் தகுதியை பெறுவதற்கு திட்டம்...
மீண்டும் உடல் தகுதி பெறுவதற்கு தீவிரப் பயிற்சிகளை மேற்கொள்கிறார் பும்ரா.
By : Bharathi Latha
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பூம்ரா முதுகின் அடிப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிறகு எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் அவரால் விளையாட முடியவில்லை. குறிப்பாக ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் அவரால் கலந்து கொள்ள முடியாத ஒரு நிலை ஏற்பட்டு இருக்கிறது. இனி இவருக்கென்று இருக்கின்ற ரசிகர்கள் முழுவதும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அதுவும் இந்தியாவில் நடைபெறுகிற கிரிக்கெட் தொடரில் நிச்சயம் அவர் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு நம்பிக்கையில் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் தற்பொழுது தன்னுடைய பிரச்சனை காரணமாக கடந்த ஆண்டு ஆசிய கோப்பை, 20 ஓவர் உலகக் கோப்பை தொடரை தவறவிட்டார். இதற்கிடையில் பும்ரா அவருக்கு கடந்த மாதத்தின் முதல் வாரத்தில் ஆபரேஷன் நடைபெற்றது. அதனால் அவர் தற்போது ஐ.பி.எல் போட்டியில் ஆட முடியவில்லை. பும்ரா இந்திய அணியில் இடம் பெறுவாரா என்பது கடினம் தான். இந்தியாவில் வருகின்ற அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் 50 ஒவ்வொரு உலகக்கோப்பை போட்டுக்கு தயாராகுவதற்கு முன்பாக உடல் தகுதி அவர் எட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதுகு காயத்தால் அவதிப்படும் நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், முதுகு அடிப்பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு நியூசிலாந்தின் வெற்றிகரமான அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பும்ரா அவர்களுக்கு தற்போது வலி எதுவும் இல்லை ஆபரேஷன் செய்யப்பட்டு இருக்கிறது. விரைவில் அவர் பழைய உடல் தகுதியை பெறுவதற்கு திட்டமிட்டு இருக்கிறார் என்று கூறப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: News