Kathir News
Begin typing your search above and press return to search.

உலக கோப்பை கால்பந்து திருவிழா: கத்தாரில் துவக்கம்!

உலக கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் நவம்பர் 20ஆம் தேதி துவங்குகிறது.

உலக கோப்பை கால்பந்து திருவிழா: கத்தாரில் துவக்கம்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  26 Oct 2022 2:26 AM GMT

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக கோப்பை கால்பந்து திருவிழா வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி கத்தாரில் துவங்குகிறது. ஒரு மாத காலம் நடைபெறும் இத்தொடரில் போர்ச்சுக்கல் நாட்டை சார்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, அர்ஜென்டினாவின் மேக்ஸி, பிரேசிலின் நெய்மர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் ஆட்டத்தை உற்சாகமாக கண்டு கழிக்கலாம். உலகின் பழமையான விளையாட்டு கால்பந்துதான் ஆதி மனிதர்கள் மண்டையோடுகள் மண்டையோடு கால்களால் எட்டி விளையாடினார்கள்.


மூன்றாம் நூற்றாண்டில் சீனாவில் கால்பந்து பிறந்ததாக கூறப்படுகிறது. பின்னர் டாங்க் அரச வம்சத்தை சேர்ந்த காலத்தில் காற்று நிரம்பிய பந்துக்கள் அறிமுகமானது. கடந்த 1863 நவீன கால்பந்து இங்கிலாந்தில் உருவானது போட்டி விதிமுறைகள் வகுக்கப்பட்டன. 1945 மே 21ஆம் தேதி பார்சல் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு அதிகமானது.


கால்பந்து போட்டி உலகக் கோப்பை தொடரை நடத்தும் ஐடியா பிரிட்டிஷ் கால்பந்து சங்க தலைவர் மனதில் தோன்றியது. இதனை தொடர்ந்து 1930 இல் முதலாவதாக உலக கால்பந்து தொடர் நடந்து வருகிறது. உலகக் கோப்பை கால்பந்து அரங்கில் பிரேசில் அணி தான் அதிகபட்சமாக ஐந்து முறை கோப்பையை பெற்று உள்ளது. இது தவிர ஏழு முறை பைனலில் விளையாடிய இந்த அணி உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் 229 கோல்களை அடித்துள்ளது. இதன் மூலம் அரபு நாடுகளின் முதல்முறையாக இத்தொடர் நடத்தப்படுகிறது. இந்த தொடர் 22 ஆவது உலகக்கோப்பை தொடராகும். இது நவம்பர் 20ஆம் தேதி துவங்குகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News