இந்தியா VS பாகிஸ்தான்: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஏற்பட்ட முக்கிய திருப்பம்?
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் எங்கு விளையாட திட்டமிட்டு இருக்கிறது?
By : Bharathi Latha
இந்திய கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் தற்பொழுது உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பதான் தற்போது வரை இருந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டு அணிகளும் விளையாடும் ஆட்டத்தை இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாட்டு ரசிகர்களும் ஆர்வமாக பார்ப்பார்கள். அந்த வகையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் ஆட்டங்களை வங்காளதேசத்தில் நடத்துவதற்காக திட்டமிடப்பட்டிருக்கிறது.
இந்த ஆண்டிற்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் தான் முற்றிலும் நடைபெறுகிறது. பாகிஸ்தான் செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கிறது. பாகிஸ்தானுக்கு செல்ல இந்திய மறுத்து விட்டதால், இந்திய அணிக்கு உரிய ஆட்டங்களை மட்டும் பொதுவான இடத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு வராவிட்டால் இந்தியாவில் நடக்கும் அக்டோபர் நவம்பர் மாதங்களின் நடைபெறும் உலக கோப்பை போட்டியை நாங்களும் புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே ஒரு எச்சரிக்கை மணியை விடுத்து இருந்தது.
இத்தகைய சூழ்நிலையில் இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு இருக்கிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் நிர்வாகிகள் பல்வேறு தரப்பிலிருந்து வாதங்களை கேட்டார்கள். பின்னர் உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அறிகுறி லீக் ஆட்டங்களை வங்காளதேசத்தில் நடத்தலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த விஷயத்தில் விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: Zee News