உலக கோப்பை போட்டிக்காக ஒடிசாவில் மிகபிரமாண்டமாக அமையும் ஹாக்கி ஸ்டேடியம்!
By : Thangavelu
கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை ஆடவர் ஆக்கி போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து வந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக உலக கோப்பை போட்டிகள் நடைபெறாமல் போனது.
இந்நிலையில், வருகின்ற 2023ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி முதல் 29ம் தேதி வரை ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலா உள்ளிட்ட நகரங்களில் 2023ம் ஆண்டு உலக கோப்பை நடத்துவதற்கு ஒடிசா அரசு முன்வந்துள்ளது
இது தொடர்பாக ஒடிசாவின் விளையாட்டு செயலாளர் வினீல் கிருஷ்ணா கூறுகையில், ஒடிசாவில் ஆக்கி போட்டியை மேம்படுத்தும் வகையில் ஏராளமான பெரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது. இதற்காக சுதந்திர போராட்ட வீரரான பிர்சா முண்டா பெயரில் சர்வதேச ஆக்கி ஸ்டேடியம் ஒன்று 20 ஆயிரம் இருக்கை வசதிகளுடன் ரூர்கேலா நகரில் அமைகிறது. இது நாட்டின் மிகப்பெரிய ஆக்கி ஸ்டேடியமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Daily Thanthi