Kathir News
Begin typing your search above and press return to search.

உலக ஆண்கள் டென்னிஸ் போட்டியில் ரஷ்ய வீரர் மெட்விடேவ் வெற்றி!

உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி தற்போது இத்தாலியில் நடைபெற்று வருகிறது.

உலக ஆண்கள் டென்னிஸ் போட்டியில் ரஷ்ய வீரர் மெட்விடேவ் வெற்றி!

ThangaveluBy : Thangavelu

  |  17 Nov 2021 8:58 AM GMT

உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி தற்போது இத்தாலியில் நடைபெற்று வருகிறது.

இதில் தரவரிசை டாப் 8 இடங்களில் உள்ள வீரர்கள் 'ரெட்' மற்றும் 'கிரீன்' என்று இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு அரையிறுதிக்கான லீக் ஆட்டத்தில் விளையாடி வருகின்றனர். இந்த முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கின்ற வீரர்கள் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்று (நவம்பர் 16) ரெட் பிரிவில் நடப்பு சாம்பியனான ரஷ்ய வீரர் டேனில் மெட்விடேவும் ஜெர்மனியை சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரேவும் விளையாடினர். இதில் டேனில் மெட்விடேவ் 63, 67, (37), 76 (86) என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்வை வீழ்த்தி வெற்றியை தன்னிலைப்படுத்தினார்.

Source, Image Courtesy: Daily Thanthi


Next Story
கதிர் தொகுப்பு
Trending News