Kathir News
Begin typing your search above and press return to search.

வாக்கு எண்ணும் மையத்தில் அருகில் கூட கணினி இருக்க கூடாது - பதற்றத்தில் அலைந்து திரியும் கரூர் தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி!

வாக்கு எண்ணும் மையத்தில் அருகில் கூட கணினி இருக்க கூடாது - பதற்றத்தில் அலைந்து திரியும் கரூர் தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி!
X

MuruganandhamBy : Muruganandham

  |  20 April 2021 6:31 AM IST

வாக்கு எண்ணும் மையத்தில் கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என்று கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.

கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளான கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, அரவக்குறிச்சி ஆகியவற்றின் வாக்கு பெட்டிகள் தனியார் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக வாக்கு எண்ணும் மையத்தில் பின்பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தவில்லை என்பதை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்திருந்தார் செந்தில் பாலாஜிபின்னர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

நேற்றிரவு வாக்கு எண்ணும் மையத்தின் அருகாமையில் அமைந்துள்ள கல்லூரி நிர்வாகத்தின் கணினி பயிற்சி அறையில் ஆள் இல்லாத நேரத்திலும், விடுமுறை நாளிலும் கணினி உள்ளிட்ட மின்சாதனங்கள் பயன்பாட்டில் இருந்ததாக திமுகவை சேர்ந்த முகவர்கள் எழுப்பிய குற்றச்சாட்டின் அடிப்படையில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பார்வையிட்டனர்.

இன்று காலை அந்த கணினி அறை மற்றும் சிசிடிவி கண்காணிப்பு அறைகளை தொழில்நுட்ப பணியாளர்கள் உதவியுடன் நேரில் பார்வையிட்டோம். கல்லூரியைச் சேர்ந்த பணியாளர்கள் அந்த அறைகளில் மின்சாதனங்களின் பிரதான இணைப்பை அணைத்துவிட்டு சென்றதாகவும், ஆனால் சில சாதனங்கள் பயன்பாட்டில் இருந்தது தெரியாது என்றும் கூறினர்.

மேலும், கல்லூரி நிர்வாகத்திடம் நாங்கள் கேட்டபோது ஒட்டுமொத்தமாக கல்லூரியின் அனைத்து கணினிகளும் ஒரே சர்வரில் இயக்கப்படுவதாக தெரிவித்தனர். அவர்கள் தெரிவித்த இந்த பதில்கள் ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை.

வாக்கு எண்ணும் மையமாக இருக்கும் இந்த கல்லூரியில் மின்னணு சாதனங்களின் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும், மாவட்ட நிர்வாகமும், தேர்தல் ஆணையமும் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News