Kathir News
Begin typing your search above and press return to search.

தேர்தலில் தோற்றால் உயிருடன் இருக்கமாட்டேன் என கூறிய வேட்பாளரின் உயிர் பிரிந்தது - தமிழக அரசியல் களத்தில் சோகம்!

தேர்தலில் தோற்றால் உயிருடன் இருக்கமாட்டேன் என கூறிய வேட்பாளரின் உயிர் பிரிந்தது - தமிழக அரசியல் களத்தில் சோகம்!
X

MuruganandhamBy : Muruganandham

  |  11 May 2021 6:45 AM IST

பட்டுக்கோட்டையில் தான் போட்டியிடும் தொகுதியில் தன்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும், அவ்வாறு வெற்றி பெறாவிட்டால் நான் உயிருடன் இருக்க மாட்டேன் என்று கூறி சுயேட்சை வேட்பாளரின் உயிர் பிரிந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சட்டப்பேரவை தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் வி.பாலகிருஷ்ணன் களமிறங்கினார். பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்ட அவர், 23,771 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.

பட்டுக்கோட்டை வட்டம் சாந்தாங்காடு கிராமத்தைச் சேர்ந்த இவருக்கு கடந்த சனிக்கிழமை கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பாலகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி மே 10ஆம் தேதி காலை உயிரிழந்தார்.

உயிரிழந்த பாலகிருஷ்ணனுக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். தேர்தலில் என்னை வெற்றி பெற வைக்காவிட்டால் நான் உயிருடன் இருக்கமாட்டேன் என, தேர்தல் வாக்கு பதிவுக்கு சில தினங்களுக்கு முன்பு அவர் பேசி வெளியிட்ட ஆடியோ தற்போது சமுக வளைதளங்களில் பரவி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு மூன்றாம் இடம் பிடித்துள்ள போதிலும், அவர் சொன்ன படியே தேர்தலில் தோல்வியை தழுவி, எதிர்பாராமல் கொரோனாவுக்கு பலியானது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News