Kathir News
Begin typing your search above and press return to search.

அந்தர் பல்டி! டுவிட்டர் கதவை இழுத்து சாத்திக்கொண்டு ஈஷா யோகா குறித்து பேசிய நிதித்துறை அமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன்!

அந்தர் பல்டி! டுவிட்டர்  கதவை இழுத்து சாத்திக்கொண்டு ஈஷா யோகா குறித்து பேசிய நிதித்துறை அமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன்!
X

MuruganandhamBy : Muruganandham

  |  20 May 2021 12:45 AM GMT

ஜக்கி வாசுதேவ் விவகாரத்தில் தமிழக நிதித்துறை அமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் திடீரென மாற்றி மாற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட அறிக்கையில், ''ஜக்கி வாசுதேவ் மீது விசாரணை அல்லது வழக்கு தொடர்வது என் கடமையும் அல்ல.

அது எனது நோக்கமும் அல்ல. மேலும், ஜக்கி வாசுதேவ் குறித்து புது தகவல்களோ, நிகழ்வுகளோ எழும் வகையில் இதைப் பற்றி நான் வேறு எந்த கருத்தையும் இனி தெரிவிக்கப்போவதில்லை. இனி எந்தவொரு நிகழ்விலும், இதுகுறித்து நான் பேச விரும்பவில்லை.

நான் 10 ஆண்டுகள் வெளிநாடுகளில் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளேன். உலகின் 50 மிக முக்கிய சர்வதேச வங்கிகளில் ஒன்றாக இருக்கும் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் சர்வதேச தலைமைப் பொறுப்பையும் ஏற்று பணிபுரிந்திருக்கிறேன்.

இத்தனை பணிகளிலும் என் வாழ்நாளில் நான் ஏற்ற பொறுப்புகளில் மிக முக்கியமான பொறுப்பு தமிழக அரசின் அமைச்சர் எனும் பெரும் பொறுப்பு . முதல்வர் என் மேல் வைத்துள்ள நம்பிக்கையின் பெயரில் இந்த பொறுப்பினை எனக்கு வழங்கியிருக்கிறார். அந்த நம்பிக்கையை காப்பாற்ற நான் பாடுபடுவேன்.

முதல்வரின் வழிகாட்டுதலின் பேரில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக மதுரை மாவட்டத்தில் ஏற்பட்டு ஒரு நோய் தொற்றுகளை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு முன்னுரிமை வழங்கி என் முழு கவனத்தையும் அதில் செலுத்தி வருகிறேன். இதையடுத்து மாநில நிதி நிலைமையை மேம்படுத்துவது மற்றும் அரசாங்கத்தின் மனிதவள நிர்வாகத்தை ஆராய்ந்து அதை சீர் செய்வதுதான் எனது நீண்டகால பணியில் முழுமையாக இருக்கிறது.

நான் அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் ஒரு நேர்காணலில் இந்து அறநிலையத்துறையின் கீழ் வரும் கோவில்களை தனியார் வசம் ஒப்படைப்பது ஜக்கி வாசுதேவின் விதிமீறல்கள் ஆகிய இரண்டு தலைப்புகள் என்மீது முன்வைக்கப்பட்டன. இந்த கேள்விகளுக்கு நான் பதில் அளித்து இருந்தாலும் இவை இரண்டும் என் அமைச்சகத்துக்கு சம்பந்தப்பட்டவை அல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இனிமேல், என் கவனம் இதுபோன்ற விஷயங்களில் சிதற நான் விரும்பவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். சம்பந்தப்பட்ட அமைச்சர்களும் துறைகளும் இந்த விஷயங்கள் மீது தக்க சமயத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள். தேவைப்படும்போது அவர்களின் விருப்பத்திற்கு இணங்க என் கருத்துக்களையும் ஆதரவையும் வழங்குவேன்.

நான் அந்த நேர்காணலில் என்ன சொல்ல வேண்டுமோ அத்தனையும் சொல்லிவிட்டேன். கொரோனா தடுப்பு பணியில் தான் என் முழு கவனத்தையும் செலுத்த விரும்புகிறேன். இதற்கு நம் ஜனநாயகத்தின் முக்கிய தூணாக விளங்கும் ஊடக நண்பர்கள் ஆதரவு தர வேண்டுகிறேன்.

ஜக்கி வாசுதேவ் மீதான விசாரணைகள் மீது கவனம் செலுத்துவது எனது பதவிக்கு பொறுப்பு அல்ல. ஈஷா பற்றி எந்தவொரு புதிய தகவலும் நான் வெளியிட மாட்டேன். அவர் தொடர்பான எந்த அறிக்கைகளையும் வெளியிட மாட்டேன்'' என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த அறிக்கையை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் பிடிஆர். ஆனால், இந்த பதிவுக்கான கமெண்ட் செக்சன் மூடப்பட்டிருக்கிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News