கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ-வை அவமானப்படுத்திய தி.மு.க அரசு - மூச்சுவிடாத காம்ரேடுகள்!

By : Muruganandham
திருத்துறைப்பூண்டி கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ மாரிமுத்துவை, அரசின் நலத்திட்ட விழாவுக்கு அழைக்கப்படவில்லை என்பது அக்கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களில், உடனடி தீர்வு காணப்பட வேண்டிய மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
இந்த விழாவிற்கு கலெக்டர் சாந்தா, நாகப்பட்டினம் எம்.பி செல்வராஜ், திருவாரூர் எம்.எல்.ஏ பூண்டிகே.கலைவாணன், மன்னார்குடி எம்.எல்.ஏ TRB ராஜா, உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
ஆனால், இதே திருவாரூர் மாவட்டத்துக்கு உட்பட்ட, திருத்துறைப்பூண்டி தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ மாரிமுத்து அழைக்கப்படவில்லை.
இது திருத்துறைப்பூண்டி தொகுதி மக்களிடையேயும், திருவாரூர் கம்யூனிஸ்ட் கட்சியினரிடமும் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க தரப்பிலோ இது மறுக்கப்படுகிறது.. வேண்டுமென்றே இப்படி செய்யவில்லை என்றும், திருத்துறைப்பூண்டி தொகுதியில பயனாளிகள் யாரும் இல்லை என்பதால், மாரிமுத்துவை அழைக்கவில்லை என்றும் சொல்கிறார்கள்.
